காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை வழங்காமல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஏற்கனவே குன்றத்தூர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் வட்டாட்சியர் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள்கூட இல்லை இந்நிலையில் இதுபோன்று தூய்மைப் பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றுவதால் தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் இடர் உள்ளது. ஆகவே இதில் அரசு கவனம் செலுத்தி குன்றத்தூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களாவது வழங்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவைக்கின்றனர்.
இதையும் படிங்க...அறிவிப்பின்றி தொழிற்சாலை மூடல்: தொழிலாளர்கள் போராட்டம்!