தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் தொடரும் மணல் திருட்டு - காஞ்சிபுரத்தில் மணல் கொள்ளை

காஞ்சிபுரம்: மணல் திருட தடை விதிக்கப்பட்டும் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் சுற்றிவளைத்தனர்.

kaanchipuram
kaanchipuram

By

Published : Feb 25, 2020, 7:51 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதுமாக 10 ஆண்டுகளாக ஆறு, ஏரி குளங்களில் வணங்குவதற்காகக் கனிமவளத் துறையினர் கடை பிறப்பித்துள்ளனர். இருப்பினும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் ஏரிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிவருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வெங்காடு ஏரியில் சிப்காட் பகுதிகளில் தேவையான சவுடு மணல் திருட்டுத்தனமாக இரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் திருட்டுத்தனமாக அள்ளிவருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் உதவி கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல் துறையினர் காலையில் சென்றபொழுது அப்பகுதியில் திருட்டுத்தனமாக சவுடு மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்களைச் சுற்றிவளைத்த காவல் துறையினர் ஒன்பது லாரி, நான்கு ஜேசிபி இயந்திரங்கள், நான்கு இருசக்கர வாகனங்கள் விட்டுவிட்டு குற்றவாளிகள் தப்பி ஓடினர்.

காஞ்சிபுரத்தில் மணல் திருட்டு

ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் வாகனங்களைப் பறிமுதல்செய்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வாகன உரிமையாளர்களைத் தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details