தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செய்யாற்றில் மணல் திருட்டு: மூன்று பேர் கைது, ஐந்து லாரிகள் பறிமுதல்!

காஞ்சிபுரம்: மாகரல் செய்யாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து ஐந்து லாரிகளை பறிமுதல் செய்தனர்.

5 லாரிகள் பறிமுதல்
5 லாரிகள் பறிமுதல்

By

Published : Aug 11, 2020, 1:03 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து ஏழு வருடங்களாக ஆற்றுப்படுகையில் மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா எச்சரித்திருந்தார்.

இருப்பினும் பல்வேறு ஆற்றுப்படுகைப் பகுதியில் நள்ளிரவில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த மாகரல் செய்யாற்றின் கரை ஓரம் நேற்று (ஆகஸ்ட் 10) நள்ளிரவு ஆற்று மணல் திருட்டில் சிலர் ஈடுபட்டுள்ளதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த உதவி ஆய்வாளர் கிஷோர் தலைமையிலான காவல் துறையினர் மணல் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்து, ஐந்து லாரிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்டதாக காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மணல் திருட்டைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்... கொலைவெறித் தாக்குதல் நடத்திய கும்பல்!

ABOUT THE AUTHOR

...view details