தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அதிக விலையில் மது விற்பனை’ - மதுப்பிரியர்கள் குற்றச்சாட்டு - காஞ்சிபுரம் அண்மைச் செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக்கடையில், அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிக விலையில் மது விற்பனை
அதிக விலையில் மது விற்பனை

By

Published : Jun 25, 2021, 8:14 AM IST

காஞ்சிபுரம் : ஶ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபானக்கடையில் (எண் 4475), விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசு மதுபான விலையை உயர்த்தி உத்தரவு பிறப்பிக்காத நிலையில், ஏன் இங்கு மட்டும் விலை அதிகரித்து விற்கப்படுகிறது என தினம்தோறும் மதுப்பிரியர்கள், டாஸ்மாக் பணியாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து மதுப்பிரியர்கள் சிலர் பேசுகையில், ”ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்த கடையில் (எண் 4475) மட்டும் மதுபான பாட்டில்கள் குறிப்பிட்டுள்ள விலையை விட ரூ.30 முதல் ரூ.60 வரை கூடுதல் விலையில் விற்பனை செய்கின்றனர்.

மதுபானங்களின் விலையை அரசு உயர்த்தாத நிலையில், இங்கு மட்டும் மதுபானங்களின் விலையை உயர்த்தியது ஏன் என்று தெரியவில்லை. இதனால் மதுப்பிரியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். இதுகுறித்து அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதையும் படிங்க: பிரபல கஞ்சா வியாபாரி கைது!

ABOUT THE AUTHOR

...view details