காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் சாலவாக்கம் ஊராட்சி செயலாளராகப் பணிபுரிந்துவருபவர் சதீஷ். இவர் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிடும் சுந்தரை அவரது இல்லத்தில் (மார்ச் 28)தனது கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களுடன் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். அது குறித்தான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
தேர்தல் விதிமுறைகளை மீறிய ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் - தேர்தல் விதிமுறைகளை மீறிய ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் ஊராட்சி செயலாளர் தேர்தல் விதிகளை மீறியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
![தேர்தல் விதிமுறைகளை மீறிய ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் salavakka](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11203953-254-11203953-1617028859518.jpg)
salavakka
ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
இது தொடர்பாக காஞ்சிபுரம் தேர்தல் நடத்தும் அலுவலரான மகேஸ்வரி ரவிக்குமாருக்கு புகார் வந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட தேர்தல் அலுவலர், ஊராட்சி செயலாளர் விதிமுறைகளை மீறியது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஊராட்சி செயலாளர் சதீஷை பணியிடை நீக்கம் செய்து மகேஸ்வரி உத்தரவு பிறப்பித்தார்.