தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராயல் என்ஃபீல்டு புல்லட் திருட்டு: சிசிடிவி காட்சி வெளியீடு - Royal Enfield Bullet

காஞ்சிபுரத்தில் ராயல் என்ஃபீல்டு புல்லட்டை திருடிச்செல்லும் இருவரின் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ரூபாய்.2 லட்சம் மதிப்பிலான ராயல் எண்பீல்டு பைக்கை இருவர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்..!
ரூபாய்.2 லட்சம் மதிப்பிலான ராயல் எண்பீல்டு பைக்கை இருவர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்..!

By

Published : May 25, 2022, 10:08 AM IST

காஞ்சிபுரம்:பூக்கடைச்சத்திரம் அருகே செட்டிகுளம் என்.ஜி.ஒ நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி என்பவர் மகன் விஜயகுமார் (42). வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியான இவர் காஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி பணி முடித்துவிட்டு வீடு திரும்பினர். தனது ராயல் என்ஃபீல்டு புல்லட்டை வழக்கம் போல வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் அதிகாலையில் வெளியே வந்து பார்த்த போது, புல்லட் காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

சிசிடிவி காட்சி

இதுகுறித்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவின் காட்சியை சோதனை செய்தனர். அதில், அருந்ததி பாளையம் வழியே நள்ளிரவில் நடந்து வந்த இருவர் விஜயகுமாரின் புல்லட்டை லாவகமாக திருடிச் செல்வது பதிவாகியிருந்தது. தற்போது புல்லட்டை திருடிச் சென்ற இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:புல்லட்-ஐ ஓட்டிப் பார்ப்பதுபோல், ஓட்டிச் சென்ற காதல் ஜோடி!

ABOUT THE AUTHOR

...view details