காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து ஆகிய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் சரகத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் சரகத்தில் செங்கல்பட்டில் ஏழு போ், திருவள்ளூரில் 18 போ், காஞ்சிபுரத்தில் ஒன்பது போ் என மொத்தம் 34 போ் முதன்மைக் குற்றவாளிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
கைது நடவடிக்கை
இவர்களைத் தவிர திருவள்ளூரில் 720, செங்கல்பட்டில் 582, காஞ்சிபுரத்தில் 592 போ் உள்பட மொத்தம் 1,894 போ் குற்றவாளிகள் அடங்கிய பட்டியலையும் காவல் துறையினர் தயார் செய்திருக்கிறார்கள்.
காஞ்சிபுரம் சரகத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்யும் பணியில் காவல் துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் ரவுடி குணா மற்றும் அவரது கூட்டாளிகள் ஆகியோர் தொடர்ந்து மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், அதனை ஒடுக்குவதற்கு ஏடிஎஸ்பி வெள்ளதுரை தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவரது தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ரவுடி படப்பை குணா
மதுரமங்கலம் பகுதியைச்சேர்ந்தவர் ரவுடி படப்பை குணா எனப்படும் குணசேகரன். இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகியப் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, நிறைய ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.