செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள அச்சிறுபாக்கத்தில் காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு வார விழாவில் நீதித்துறை போக்குவரத்துத் துறை, லயன்ஸ் கிளப் வர்த்தகர் சங்கம், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்ட சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
காவல் துறையினர் நடத்திய சாலைப் பாதுகாப்பு பேரணி - Road safety rally held by police near Maduranthanam
காஞ்சிபுரம்: அச்சிறுப்பாக்கத்தில் ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

இதில் மதுராந்தகம் சார்பு நீதிமன்ற நீதிபதி சரிதா, நீதிபதி திருமால், மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் மகேந்திரன், அச்சிறுபாக்கம் காவல் துறை ஆய்வாளர் சரவணன், வட்டாரப் போக்குவரத்து துறை ஆய்வாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பேரணியை சார்பு நீதிமன்ற நீதிபதி சரிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அச்சரப்பாக்கம் முக்கிய வீதி வழியாக இப்பேரணி நடைபெற்றது. 'தலைக்கவசம் உயிர்கவசம், தலைக்கவசம் அணிவீர்; உயிரிழப்பைத் தவிர்ப்பீர், உரிமம் கேட்டு எட்டுபோடு உயிரைக்காக்க ஹெல்மெட் போடு, சாலையில் அலைபேசி ஆபத்தாகும் நீ யோசி' போன்ற பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்துகொண்டனர்.