காஞ்சிபுரம்: இதுகுறித்தான புகாரில், ‘திருவள்ளூர்பொன்னேரியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற திமுகவின் ஓராண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்விப் பணிகளின் கழகத்தின் தலைவரும்,திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றியுள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயராக பட்டியலின பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த பெண் தேர்ந்தெடுக்கப்பட்டதை குறித்து, ’சட்டையை கழற்றி அக்குளில் வைத்திருந்த சமூகம், தனது செருப்பைக் கழற்றி தலையில் வைத்துக் கொண்டிருந்த சமூகம்’ எனப் பேசியுள்ளார்.
இந்நிலையில் திண்டுக்கல் ஐ.லியோனியின் இச்செயல் மிகவும் கீழ்த்தனமாகவும், கேவலமாகவும், பொதுமக்கள் மத்தியில் பொதுவெளியில் திட்டமிட்டு பட்டியலின மக்கள் மற்றும் பெண்களை அவமானமாகப் பேசியுள்ளதாகவும், அவரது பேச்சில் உள்நோக்கமும் பட்டியலின சமூகத்தைப் பற்றி வருங்கால சந்ததிகளுக்கு தவறான கருத்தையும் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்நோக்கத்தோடு பட்டியலினத்தவரை மேயராக்கியது தனது கட்சி தான் என தவறான செய்தியைப் பரப்பி வருகின்றார்.
இதனை ஜெகன் மூர்த்தியார் தலைமையிலான புரட்சி பாரதம் கட்சியினர் வன்மையாக கண்டிக்கின்றது. பட்டிலியன - பழங்குடியின சமூகத்தை பொதுவெளியில் இழிவாக சித்தரித்தும், சாதிய வன்கொடுமையைத் தூண்டும் விதமாகவும் பேசிய திண்டுக்கல் ஐ. லியோனி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புரட்சி பாரதம் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் தனசேகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் இன்று(மே24) காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகரிடம் புகார் மனு அளித்தனர்.
இதையும் படிங்க:பட்டியலின மக்களை இழிவுப்படுத்தி பேசியதாக திண்டுக்கல் ஐ லியோனி மீது பாஜக புகார்