தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 4, 2021, 10:06 PM IST

ETV Bharat / state

மதூர் கல் குவாரி விபத்து - மீட்புப் பணிகள் நிறுத்தம்

காஞ்சிபுரம்: மதூர் கல் குவாரியில் விபத்து ஏற்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மாலை நேரம் இருள் சூழ்ந்ததால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.

மதூர் கல் குவாரி  மதூர் கல் குவாரி விபத்து  மதூர் கல் குவாரியில் மீட்புப் பணிகள் நிறுத்தம்  Rescue operations stopped at Mathur stone quarry  Mathur stone quarry  Mathur stone quarry Accident
Rescue operations stopped at Mathur stone quarry

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் மதூர் கிராமத்தில் இயங்கி வருகிறது ஆறு படையப்பா கல்குவாரி. இங்குள்ள 200 அடி பள்ளத்தில் தொழிலாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் லாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் பணியில் இருந்தனர். அப்போது, மேலிருந்த மண், கற்கள் திடீரென சரிந்ததில் விபத்து ஏற்பட்டு கிரேன் ஆப்பரேட்டர் மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் வட மாநில ஊழியர்களான சோனா அன்சாரி, சுரேஷ் ஆகிய இருவரும் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சோனா அன்சாரி சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இவ்விபத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியானது ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

கல் குவாரியில் மீட்புப் பணிகள் நிறுத்தம்

இந்நிலையில், தற்போது மாலை நேரம் இப்பகுதியில் இருள் சூழ்ந்தால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஜே.சி.பி.வாகனங்கள் கல்குவாரியிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு அருகாமையில் நிறுத்தப்பட்டுள்ளன. மீண்டும் நாளை அதிகாலை 5 மணியளவில் மீட்புப் பணிகள் தொடங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கல்குவாரி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details