தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் மாற்றியமைக்கப்பட்ட பேருந்து அட்டவணை வெளியீடு - Transport Corporation Villupuram Division

கரோனா இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் இருந்து வெளிமாநிலம், மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் புறப்படும் நேரம் குறித்த அட்டவணை வெளியாகியுள்ளது.

Release of Modified Bus Schedule at Kanchipuram
Release of Modified Bus Schedule at Kanchipuram

By

Published : Apr 20, 2021, 3:24 PM IST

Updated : Apr 20, 2021, 3:30 PM IST

காஞ்சிபுரம்:கரோனோ வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயில் நகரம், பட்டு நகரம், சுற்றுலா நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்திற்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வெளிமாநில, வெளி மாவட்ட பயணிகள் பட்டுப் புடவைகளை எடுப்பதற்கும், கோயில்களை சுற்றிப் பார்ப்பதற்கும், வந்து செல்லும் நிலையில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதால் பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்திலிருந்து பெங்களூருக்கு செல்ல மதியம் 3 மணிக்கு கடைசி பேருந்து இயக்கப்படும் என்றும், அதேபோல திருப்பதிக்கு இரவு 8 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருச்சிக்கு மதியம் 3:15 மணிக்கும், சேலத்திற்கு 2.30 மணிக்கும், திருவண்ணாமலைக்கு மாலை 6 மணிக்கும், விழுப்புரத்திற்கு 7 மணிக்கும், சென்னை, வேலூர், செங்கல்பட்டு பகுதிகளுக்கு இரவு 8 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் இரவு நேர ஊரடங்கு உத்தரவுக்கு ஏற்றவாறு தங்களுடைய பேருந்து பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு செல்லுமாறும் போக்குவரத்து துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Last Updated : Apr 20, 2021, 3:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details