சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி தான் தங்கியிருந்த சொகுசு விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு சித்ராவுடன் விடுதியில் தங்கியிருந்த அவரின் கணவர் ஹேம்நாத் தான் காரணம் என சித்ராவின் தாயார் விஜயா உட்பட பலர் குற்றஞ்சாட்டி வந்தனர். மேலும், சித்ராவின் தற்கொலை தொடர்பாக நேற்று அவரது தாய், தந்தை மற்றும் குடும்பத்தாரிடம் திரும்பெரும்புதூர் வருவாய் கோட்டாச்சியர் திவ்யஸ்ரீ 3 மணி நேரம் விசாரணை நடத்தினார். அப்போது ஆர்.டி.ஓவிடம் ஹேம்நாத் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சித்ராவின் குடும்பத்தினர் தெரிவித்துச் சென்றனர்.
இந்நிலையில், சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் வருவாய்க் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ இன்று விசாரணை நடத்தவிருந்த நிலையில், சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரின் கணவர் ஹேம்நாத்தை நேற்று நள்ளிரவில் கைது செய்த நசரத்பேட்டை காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.