காஞ்சிபுரம் மாவட்டம், சித்தேரி மேடு பகுதியில் பி.கே.எம் என்ற தனியார் பொறியியல் கட்டுமானத் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இந்த தொழிற்சாலையில் வித்தியாசமான அரியவகை பறவை ஒன்று சுற்றித் திரிந்துள்ளது.
இதனைப் பார்த்த தொழிற்சாலை தொழிலாளர்கள், பொறியியல் இயந்திரங்களில் சிக்கி, அடிபடாதவாறு அந்தப் பறவையை பாதுகாப்பாகப் பிடித்து பார்த்த போது, அது அரிய வகை ஆந்தை என தெரிய வந்தது.