தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் யானையை வைத்து யாசகம் - நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை - கோதை என்ற பெண் யானை

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் கோயிலில் யானையை வைத்து யாசகம் என்ற பெயரில் சம்பாதிக்கும் பாகனால் கோயிலுக்கு வரும் பக்தர்களிடையே மன வேதனை ஏற்பட்டுள்ளது.

ramajur-temple
ramajur-temple

By

Published : Dec 26, 2020, 3:31 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 1000 ஆண்டுகள் பழமையான ராமானுஜர் கோயிலில், 29 வயதுடைய கோதை என்ற பெண் யானை உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் அவதரித்த ஆதிகேசவ பெருமாள் கோயிலில் உள்ள பெண் யானையை துன்புறுத்தி பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே தும்பிக்கை மூலம் ஆசீர்வாதம் வழங்க வேண்டும் என பாகனின் நடவடிக்கை இருப்பதாக கூறப்படுகிறது.

இதேபோன்று பணம் கொடுக்காத பக்தர்களுக்கு ஆசீர்வாதம் கிடையாது என்றும் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் ஆசீர்வாதம் என்று யானை பாகன் கூறி வருவது தங்களை அலட்சியப்படுத்துவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

ramajur-temple

மேலும், யாசகம் என்ற பெயரில் கோயில் யானையை துன்புறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details