காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (டிச. 04) இரவு முதல் பெய்துவரும் தொடர் கனமழையால், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனைச் சரிசெய்ய காஞ்சிபுரம் பருத்தி குளத்தைச் சேர்ந்த மின்சார ஊழியர் பாக்கியநாதன் (40), அவருக்கு உதவியாகச் சென்ற ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த தயாளன் (36) ஆகிய இருவரும் சரிசெய்ய சென்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
உயிரிழந்த இருவருக்கும் மனைவி, 2 பெண்கள் குழந்தைகள் உள்ளனர். இது குறித்து தகவலறிந்த பாலுச்செட்டிசத்திரம் காவல் துறையினர் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் மின் ஊழியர்களின் மறைவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கம் அருகில் அறுந்து கிடந்த மின்கம்பியை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி மின்துறை ஊழியர் உள்பட இருவர் உயிரிழந்தது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.