காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளதால், வாக்கு விழுக்காடு குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்தரமேரூர் ஒன்றியத்தில் காலை ஏழு மணியிலிருந்தே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 9 மணி முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேவரியம்பக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், மழைநீர் 3 அடிக்கு மேல் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.
இந்தப்பள்ளி வளாகத்தில் 5 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. இந்நிலையில் கிராம ஊராட்சிச் செயலர் விரைவாக செயல்பட்டு, நீரை வெளியேற்ற மோட்டார் அமைத்து நீரை தற்போது வெளியேற்றி வருகின்றனர்.
தொடர்மழை காரணமாகப் பள்ளிகளில் ஊழியர்கள் பணிபுரிவதற்கு சற்று சிரமப்பட்டு வருகின்றனர். குளிர்காற்று, தொடர்மழை தொடர்ந்தால் வாக்குப்பதிவு விழுக்காட்டுப் பதிவு குறைய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: வாக்களிக்க அனுமதி மறுப்பு - பெண் வாக்காளரின் மாமனார் வாக்குவாதம்