தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7.9 செ.மீ. மழைப்பதிவு! - Burevi Storm

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7.9 செ.மீ. அளவு மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக குன்றத்தூரில் 2.42 செ.மீட்டரும், குறைந்த அளவில் வாலாஜாபாத்தில் 0.58 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

மழை
மழை

By

Published : Dec 7, 2020, 10:40 AM IST

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்துவருகிறது. அதன் தொடர்வாக காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கனமழை முதல் மிதமான மழை பெய்துவருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

இந்நிலையில் இன்று (டிச. 07) காலையில் சிறிது நேரம் மழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் இயல்பு நிலையில் வானிலை உள்ளது.

காஞ்சிபுரத்தில் 1.42 செ.மீ., ஸ்ரீபெரும்புதூரில், 2.38 செ.மீ., உத்திரமேரூரில் 1.1 செ.மீ., வாலாஜாபாத்தில் 0.58 செ.மீ.,
குன்றத்தூரில் 2.42 செ.மீ. என காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 7.9 செ.மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 2.28 செ.மீட்டரும், குறைந்த அளவில் வாலாஜாபாத்தில் 0.3 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது.

இதையும் படிங்க: நாமக்கல்லில் மீண்டும் சரிந்த முட்டை விலை!

ABOUT THE AUTHOR

...view details