தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குழாய் வெடித்து போக்குவரத்து பாதிப்பு! - traffic on Sriperumbudur highway

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலைகளுக்குச் செல்லும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குழாய் வெடித்து 5 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

Sriperumbudur

By

Published : Nov 22, 2019, 9:35 PM IST

ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சுங்குவார்சத்திரம், பிள்ளைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்களும் இருசக்கர வாகனங்கள், கார், கனரக வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் உள்ளன.

இந்த தொழிற்சாலைகளுக்குச் செல்லும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குழாய்களில் அதிகப்படியான தண்ணீர் செலுத்தப்பட்டு அவற்றில் கசிவுகள் ஏற்படுகிறதா என்பது சென்னை பெருநகர குடிநீர் வாரியம் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய அலுவலர்களால் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

தண்ணீர் குழாய் வெடித்து 5 அடி உயரத்திற்கு தண்ணீர் வெளியேறி போக்குவரத்து பாதிப்பு

இச்சோதனையில் குன்றத்தூரையடுத்த நந்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட குழாய்களில் கசிவு ஏற்பட்டு சுமார் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதனால் குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

இதையும் படிங்க: கனமழையால் நெடுஞ்சாலையின் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details