தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மதுபான கடைக்கு எதிராகப் பெண்கள் திடீர் போராட்டம்

சுங்குவார்சத்திரம் அருகே புதியதாகத் திறக்கப்பட்ட அரசு மதுபான கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

sungavarchatiram
sungavarchatiram

By

Published : Aug 7, 2021, 6:54 AM IST

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சுங்குவார்சத்திரம் அருகே கீரநல்லூர் பகுதியில் 4007 எண் கொண்ட புதியதாக அரசு மதுபானக்கடை கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்விதமாக நேற்று (ஆக. 6) கீரநல்லூர் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசு மதுபான கடையை மூடக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இச்சம்பவம் அறிந்து வந்த சுங்குவார்சத்திரம் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளதன்பேரில் மக்கள் கலைந்துசென்றனர்.

கிராமப் பெண் பேட்டி

இது குறித்து கிராம பெண்மணி அமுதா கூறுகையில், "எங்கள் கிராமம், சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில அவ்வழியாகச் செல்ல வேண்டிய நிர்பந்தமும் பணிக்குச் செல்லும் பெண்களும் வீடு திரும்புகையில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

கணவரின் குடும்ப வருமானம் அனைத்தும் மதுவிற்குச் செலவானால் குடும்ப வருவாயை எப்படி நடத்துவது. இங்கு கடை திறந்தால் கண்டிப்பாகத் தீக்குளிப்பேன்" எனக் கூறினார். பெண்ணின் இந்தப் பேச்சால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளதாகவும் இருப்பினும் அரசு மதுபான கடை மண்டல மேலாளர் இதற்கு அனுமதி அளித்தது. மேலும் காஞ்சிபுரத்திலும் இது போன்ற பல மதுபான கடைகளில் பொதுமக்கள் எதிர்ப்பு இருந்தும் மீண்டும் மதுபான கடை திறக்கப்படுகிறது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.

இதையும் படிங்க:ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பும் முழு விவரமும்!

ABOUT THE AUTHOR

...view details