காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்டது சிறுவாக்கம் கிராமம். இக்கிராமத்தின் மத்தியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த வள்ளியம்மன் கோயில் குளம் உள்ளது. இக்குளத்தின் அருகாமையிலேயே அரசு அங்கன்வாடி பள்ளி, நடுநிலைப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளிட்டவைகள் இயங்கி வருகின்றன,
இக்குளத்தின் நீரையே அப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். இந்தச்சூழ்நிலையில், கரையோரம் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளின் கழிவுநீர் இக்குளத்திற்குள் விடப்படுவதால் குளம் மாசடைவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வீடுகளின் கழிவு நீரை குளத்தில் முறைகேடாக விடுவது, வீட்டின் பின்புறத்தில் கழிவு நீர் தொட்டிகளை அமைத்தது உள்ளிட்ட காரணங்களால் குளத்திலுள்ள மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் மன வேதனை தெரிவித்தனர்.
சிறுவாக்கம் குளத்தை மீட்க பொதுமக்கள் கோரிக்கை இதுதொடர்பாக பலமுறை ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கும் அப்பகுதிமக்கள், இனியும் தாமதிக்காமல் ஆக்கிரிமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:வீராணம் ஏரியிலிருந்து நீரேற்றம் செய்ய முடிவு