காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட பேருந்து நிலையத்தில் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பேசுகையில்,"தனியார் பள்ளிகள் கூடுதல் ஆவதும், அரசுப் பள்ளிகள் குறைகிறது என்பது தவறான கருத்து என்றும், இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் 2 லட்சம் பேர் சேர்க்கைக்கு வந்திருப்பதாகவும் வரும் ஆண்டில் அது 3 லட்சமாகும் என்றார். எனவே பள்ளிகள் எண்ணிக்கை முக்கியமல்ல மாணவர் சேர்க்கை தான் முக்கியம் என்ற அவர், அரசு பள்ளியின் வளர்ச்சி கண்டு தனியார் பள்ளிகள் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.