தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நிதிநிலை அறிக்கை ஒரு சடங்குபோல் ஆகிவிட்டது' - பிரேமலதா விஜயகாந்த்

காஞ்சிபுரம்: நிதிநிலை அறிக்கை ஒரு சடங்குபோல் ஆகிவிட்டது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

By

Published : Feb 2, 2021, 8:22 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் தேமுதிக மாவட்டத் துணைச் செயலாளர் வெங்கடேசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர், "நிதிநிலை அறிக்கையில் நிறைகளும் குறைகளும் உள்ளன. சாதகங்கள், பாதகங்கள் இருக்கின்றன. விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். உழவர்களுக்கு நிரந்தரத் தீர்வைக் கண்டு, எந்த ஒரு குறைகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

நிதிநிலை அறிக்கை அறிவிப்பு எப்படி மக்களுக்குப் போய்ச் சேருகிறது, பலன் அளிக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நிதிநிலை அறிக்கை ஒரு சடங்குபோல் ஆகிவிட்டது. ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுகிறது. அந்த நிதிநிலை அறிக்கை மக்களைப் போய்ச் சேருகிறதா, இல்லையா? என்பதை யாரும் கவனிப்பதில்லை.

சசிகலா தமிழ்நாட்டிற்கு வரும்பொழுது அரசியலில் எந்த மாதிரியான மாற்றம் ஏற்படும் என்பதைப் பார்க்க நானும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: மனுக்களை ஸ்டாலின் பெறுவதே... குப்பையில் வீசத் தான் - தேமுதிக சுதீஷ்

ABOUT THE AUTHOR

...view details