தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் நரேந்திரமோடியை ட்வீட் செய்து கலாய்த்த பிரகாஷ் ராஜ்! - பிரதமர் மோடிக்கு பிரகாஷ் ராஜ் நக்கல் ட்விட்

காஞ்சிபுரம்: பிரதமர் நரேந்திர மோடி கோவளம் கடற்கரைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் வீடியோவுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் நக்கலாகப் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

prakash raj justasking, பிரதமர் மோடிக்கு பிரகாஷ் ராஜ் நக்கல் ட்விட்

By

Published : Oct 12, 2019, 11:41 PM IST

காஞ்சிபுரம் மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்து கொண்டு சுற்றுலாத் தளங்கள், கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். பின்னர் இரவு பிரதமர் கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் விடுதியில் தங்கியிருந்தார். இன்று காலை விடுதிக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் அவர் நடைப் பயிற்சி செய்தார்.

prakash raj justasking, பிரதமர் மோடிக்கு பிரகாஷ் ராஜ் நக்கல் ட்வீட்

அப்போது கடற்கரையோரமிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை கைகளால் எடுத்து சுத்தப்படுத்தினார். அதை ஹோட்டல் ஊழியரிடம் கொடுத்து அப்புறப்படுத்த சொன்னதாகவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோவிற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ’ஒரு கேமராமேனை பின் தொடர, பிரதமர் மோடியை தனியே விட்டுவிட்டு பாதுகாவலர்கள் எங்கே சென்றனர் எனவும் வெளிநாட்டு தூதுக்குழு இங்கு வந்து இருக்கும்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அருகிலுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்யாமல் வைத்து விட்டார்களா என்ன?' என்றும் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டடங்கள்; மத்திய அமைச்சர் திறந்து வைப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details