காஞ்சிபுரம்:நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. கரோனோ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் தடைகளைத் தளர்த்தி திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளை அனுமதித்து திரைப்படங்களைத் திரையிட அனுமதிக்க வேண்டும் என நடிகர் விஜய் முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கைவிடுத்திருந்தார்.
அதையடுத்து திரைஅரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளை அனுமதித்து திரைப்படங்களைத் திரையிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு தற்போது பரவிவரும் புதிய கரோனா வைரஸைக் காரணம்காட்டி 100 விழுக்காடு இருக்கைகளைத் திரையரங்குகளில் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டது.
மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில் 50 விழுக்காடு இருக்கைகளுடன் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி திரைப்படங்களைத் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வர உள்ளது.