செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே திருநிலை கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஆடல், பாடல், நடனம், கயிறு இழுத்தல், பானை உடைத்தல், இசை நாற்காலி போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் மூன்று இடங்களைப் பிடித்த போட்டியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.