காஞ்சிபுரம் சின்னையான் சத்திரம் அடுத்துள்ள சிங்காடிவக்கம் பகுதியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. சிங்காடிவக்கம் அரசுப்பள்ளி அருகே கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் ரசாயன தொழிற்சாலை இயங்கிவருகிறது.
கடந்த 32 ஆண்டுகளாக இயங்கிவரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக அவ்வப்போது உரிய பராமரிப்புப் பணி மேற்கொள்ளாத காரணத்தினால் ரசாயன கழிவுகள் உள்ளிட்டவை வெளியேறிவருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுவைத்துள்ளனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக அங்கு செயல்பட்டுவரும் ரசாயன ஆலையில் ரசாயன புகை, ரசாயன கழிவுகள் வெளியேறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவின் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.