இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் தேதி அறிவித்தையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.
தேர்தல் நடைமுறைகள் அமல் - கட்சி பேனர்கள், போஸ்டர்கள் அகற்றும் பணி தீவிரம்! - கட்சி பேனர்கள் அகற்றம்
காஞ்சிபுரம்: தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தையடுத்து அரசியல் கட்சி பேனர்கள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள் உள்ளிட்டவைகளை அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது.
அதன்படி, அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள், அரசியல் கட்சி பேனர்கள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களை மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர் செல்வம் தலைமையில், வருவாய்த்துறையினர் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய கேஜ்ரிவால் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!