கோவையைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி(50). காவல் உதவிஆய்வாளரான இவர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் அத்திவரதர் நிகழ்வுக்கு பாதுகாப்பிற்காக வந்திருந்தார். இந்நிலையில் நேற்று பாதுகாப்பு பணியை முடித்து விட்டு ஒய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
அத்தி வரதர் நிகழ்வு பாதுகாப்பில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு - SUB INSPECTOR
காஞ்சிபுரம்: அத்திவரதர் நிகழ்வு பாதுகாப்பிற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சக காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
DEAD
பின்பு சக காவலர்கள் அவரை எழுப்பிய போது உடலில் எந்த அசைவும் இல்லாததை கண்டு, மருத்துவர்களை வரவழைத்து பரிசோதித்த போது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
பின்னர் அவரது உடலுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தி, உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காவல் உதவிஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சக காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திள்ளது.