காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா மேவளூர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா. கணவரை இழந்த இவர் தன் இரண்டு மகள்களுடன் மேவளூர்குப்பம் கிராமத்தில் தனது பூர்வீகமான இடத்தில் அமைத்துள்ள குடிசையில் வாழ்ந்துவருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் அந்த இடத்திற்கு உரிமை கொண்டாடியுள்ளார். அதன் காரணமாக இருதரப்பினரும் இடம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
இந்நிலையில் சக்திவேல் வெளியூர் அடியாள்கள் 20 பேருடன் சந்திரா வசித்த குடிசை வீட்டிற்கு வந்து அவர்கள் வீட்டினுள்ள பாத்திரம், பண்டங்கள் என அனைத்து பெருள்களையும் வெளியே எடுத்து வீசினர். அதன்பின்னர் குடிசையை பிரித்துப் போட்டுவிட்டு சென்றனர். இச்சம்பவத்தின் போது சந்திரா மற்றும் அவரது மகள்கள் மூவரும் சேர்ந்து சக்திவேலின் செயலை தடுக்க முயன்றனர். ஆனால் சக்திவேல் அவர்களை தாக்கி காயப்படுத்தினார்.