தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

படுஜோராக நடைபெறும் பாக்கெட் சாராயம் விற்பனை - கண்டு கொள்ளாத போலீசார்! - பாக்கெட் சாராயம் விற்பனை

காஞ்சிபுரம்: திருக்கழுக்குன்றம் அருகே சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வரும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

kanchipuram

By

Published : Sep 30, 2019, 9:51 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள பரமசிவன் தெருவில் பாக்கெட் சாராய வியாபாரம் படுஜோராக நடைபெற்று வருகிறது. திருக்கழுக்குன்றம் காவல்துறையினர் கண்டு கொள்ளாததால் ஏராளாமானோர் அங்கு சென்று சாராயத்தை வாங்குகின்றனர்.

இந்நிலையில், அங்கு சென்று குடிக்கும் நபர்கள் போதை தலைக்கேறியதும் நடக்கமுடியாமல் பரமசிவன் தெருவிலேயே ஆங்காங்கே படுத்து விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

திருக்கழுக்குன்றம் பகுதிப் பெண்கள்

இதுகுறித்து அப்பகுதி பெண்கள்,

'கடந்த ஒருவாரமாக இங்கு சாராய வியாபாரம் நடந்து வருகிறது. இதை ரோந்து பணியில் வரும் காவல்துறையினர் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

எனவே, சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் திருக்கழுக்குன்றம் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கோரிக்கை வைக்கின்றோம்' - இவ்வாறு தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

வெளிமாநில பாக்கெட் சாராயம் வைத்திருந்த இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details