காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் தனியார் வங்கி ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் அதிகாலை மூன்று மணி அளவில் கொள்ளையர்கள் புகுந்தனர். பின்னர் அவசர அவசரமாக அவர்கள் திருட முயற்சி செய்தபோது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் வந்துள்ளனர்.
ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி - கொள்ளையர்களுக்கு காவல் துறை வலைவீச்சு - ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டமுயன்றனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் வந்ததால் அவர்கள் அலறியடித்து ஓடிவிட்டனர்.
கொள்ளையர்கள் திருட முயன்ற ஏடிஎம்
இதனை பார்த்த கொள்ளையர்கள் தலைதெறிக்க ஓடினர். உடனடியாக காவல் துறையினர் ஏடிஎம் உள்ளே சென்று பார்வையிட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் பணம் எதுவும் திருடுபோகவில்லை என்பது தெரியவந்தது. மேலும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி: போலீசார் விசாரணை!