உத்திரமேரூர் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்திலுள்ள விவசாயக் கிணற்றின் உள்ளே இரண்டு வயது மதிக்கத்தக்க புள்ளிமான் இருந்துள்ளதை அப்பகுதி விவசாயிகள் கண்டனர். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலின் பேரில் வன அலுவலர் நரசிம்மன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதற்கிடையே கிராம மக்களே ஒன்று கூடி கயிறு கட்டி புள்ளி மானை பத்திரமாக உயிருடன் மீட்டனர். கிணற்றிலிருந்து வெளியே வந்த புள்ளிமான் துள்ளி குதித்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் தண்ணீர் தேடி வரும் வனவிலங்குகள் இன்னல்களில் மாட்டிக் கொள்கின்றன.