தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சியில் பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம்: மத்திய முன்னாள் இணை அமைச்சர் பங்கேற்பு! - காஞ்சிபுரம் பாமக வேட்பாளர் அறிமுகம்

காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், பாமக வடக்கு மண்டல இணைப் பொதுச்செயலாளரும், மத்திய முன்னாள் இணை அமைச்சருமான ஏ.கே. மூர்த்தி பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் பா.ம.க.வேட்பாளர் அறிமுக கூட்டம்

By

Published : Mar 16, 2021, 10:19 PM IST

காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக கூட்டணி பாமக வேட்பாளரான மகேஷ்குமாரின் அறிமுக கூட்டமும், தேர்தல் பணிகள் குறித்த செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டமும், ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று (மார்ச் 16) நடைபெற்றது.

இதில் மத்திய முன்னாள்இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி பங்கேற்று, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

காஞ்சிபுரத்தில் பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம்

குறிப்பாக எதிர்வரும் தேர்தலில் காஞ்சிபுரம் பாமக வேட்பாளரும், அதிமுக வேட்பாளர்களையும் பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற, எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளரும், உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான வி. சோமசுந்தரம், அதிமுக கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், பாமக மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் பொன் கங்காதரன் மற்றும் அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:'சீட் தராததால் கண்ணீர்விட்ட எம்எல்ஏ - ரங்கசாமி காரின் முன்பு படுத்து தர்ணா'


ABOUT THE AUTHOR

...view details