பிரதமர் மோடியுடனான 2ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வந்தார்.
உச்சி மாநாட்டின் முதல்நாளான இன்று, இருதலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிற்பங்களை பார்வையிட்டவாரே உரையாடினர். இதைத் தொடர்ந்து, சீன அதிபர் பிரதமர் மோடியுடன் அமர்ந்து உணவு உண்டார்.
இதில் இட்லி, தோசை, தக்காளி ரசம், மலபார் இறால், கோரி கெம்பு (பொறிச்ச சிக்கன்), மட்டன் உலர்த்தியது, கருவேப்பிலை மீன் வறுவல், தஞ்சாவூர் கோழிக் கறி, இறைச்சி கெட்டிக் குழும்பு, பீட்ரூட் கோங்குரா சாப், பச்சை சுண்டைக்காய் அரைச்ச குழம்பு, மம்சம் பிரியாணி, ரொட்டி, அடப்பிரதமன் பாயாசம், கவனரிசி ஹல்வா, முக்கனி ஐஸ்க்ரீம் என லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒருவழி ஆகியிருப்பார்!
இதையும் வாசிங்க : மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: செய்திகள் உடனுக்குடன்!