சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 50ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் பெரியார் குறித்து ரஜினி கூறிய கருத்துகள், தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான விஷயமாக பேசப்பட்டுவருகிறது. நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து மத அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
இது ஒருபுறமிருக்க ரஜினிகாந்தின் கருத்துக்கு திமுக, அதிமுக, திக உள்ளிட்ட கட்சிகள் எதிராகக் கருத்து கூறிவருகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த களியப்பேட்டை பகுதியில் பெரியார் சிலையை சமூகவிரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர்.