தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100ஆவது நாளை எட்டிய பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் - parantur airport protest

பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 100ஆவது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

100ஆவது நாளை எட்டிய பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டம்
100ஆவது நாளை எட்டிய பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டம்

By

Published : Nov 4, 2022, 11:18 AM IST

காஞ்சிபுரம்: பரந்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில், சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கி 4,750 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2ஆவது புதிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும், என மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமப்புறங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளது. விமான நிலையம் அமைப்பதால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

100ஆவது நாளை எட்டிய பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டம்

கிராமசபை கூட்டங்களிலும், விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாள்தோறும் இரவு நேரங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 100ஆவது நாளாக நேற்று இரவு (நவ.3) ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு, விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அத்திட்டத்தினை கைவிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:பிணத்துடன் சாலை மறியல் செய்த மக்கள்: போராட்டத்தை முடித்து வைத்த சபாநாயகர்

ABOUT THE AUTHOR

...view details