தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆங்கிலப் புத்தாண்டு 2022: காஞ்சியில் குவியும் மக்கள்!

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இன்று காஞ்சி காமாட்சியம்மாளை தங்களது குடும்பத்தாருடன் பக்தர்களும், பொது மக்களும் தரிசித்துவருகின்றனர்.

காஞ்சி காமாட்சியம்பாளை தரிசிக்க குவியும் மக்கள்
காஞ்சி காமாட்சியம்பாளை தரிசிக்க குவியும் மக்கள்

By

Published : Jan 1, 2022, 1:11 PM IST

காஞ்சிபுரம்:உலகம் முழுவதும் இன்று ஆங்கிலப் புத்தாண்டு 2022 வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும்விதமாகவும், இந்த ஆண்டின் முதல் நன்னாளில் இறை வழிபாட்டோடு தொடங்கிட காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்குத் தங்களது குடும்பத்தாருடன் பக்தர்களும், பொதுமக்களும் என ஏராளமானோர் வருகைபுரிந்து காஞ்சி காமாட்சியம்மாளை தரிசித்துவருகின்றனர்.

குறிப்பாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றும் வகையில் முகக் கவசங்கள் அணிந்துகொண்டும், கிருமி நாசினி, உடல் வெப்பநிலை பரிசோதனை, தகுந்த இடைவெளி போன்றவற்றை கடைப்பிடித்து பக்தர்களும், பொதுமக்களும் சாமி தரிசனம் செய்துவருகின்றனர். மேலும், குடும்பத்தினருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துவருகின்றனர்.

காஞ்சி காமாட்சியம்மாளை தரிசிக்க குவியும் மக்கள்

இதேபோல் வரதராஜப்பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், குமரகோட்டம் முருகப்பெருமான் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பொதுமக்களும் பக்தர்களும் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: 4 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details