தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ. 100 அபராதம்! - காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம்: மே மாதம் 18ஆம் தேதிக்குப் பிறகு முகக் கவசம் அணியாமல் வரும் பொதுமக்களிடம் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா எச்சரித்துள்ளார்.

பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

By

Published : May 16, 2020, 3:05 PM IST

Updated : May 16, 2020, 4:20 PM IST

காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் சென்ற பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா முகக் கவசங்களை வழங்கினார். மேலும், முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் கூறியதாவது, “மே 17ஆம் தேதி வரை அரசு சார்பில் மாவட்டம் முழுவதும் முகக் கவசங்கள் வழங்கப்படும். மே 18ஆம் தேதிக்குப் பின்னர் முகக் கவசம் அணியாமல் வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்றார்.

பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் சரவணன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, நகராட்சி பொறியாளர் மகேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு தலைமை கொறடா ஆலோசனை

Last Updated : May 16, 2020, 4:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details