தமிழ்நாடு

tamil nadu

தடுப்பூசி போடும் இடத்தில் காணாமல்போன சமூக இடைவெளி!

By

Published : May 31, 2021, 7:25 PM IST

காஞ்சிபுரம்: அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றாதால் அவர்களுக்கு தொற்று அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கரோனா பரவல்: தடுப்பூசி போடும் இடத்தில் காணாமல்போன சமூக இடைவெளி!
கரோனா பரவல்: தடுப்பூசி போடும் இடத்தில் காணாமல்போன சமூக இடைவெளி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட தாலுகாக்களில் பொதுமக்களுக்குக் கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தடுப்பூசி முகாமக்களில் மாவட்டம் முழுவதும் இதுவரை 89 ஆயிரத்து 132 பேர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் நடைபெற்று வந்த தடுப்பூசி முகாமக்களில் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தினால் இன்று (மே 31) தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை. இதனால், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.

அரசு மருத்துவமனையில் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் பொதுமக்கள் குவிந்து நின்றதால் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தவர்களுக்குத் தொற்றுப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனா மருந்து வாங்க நாட்டு வைத்தியரிடம் குவிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details