தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாட்டு தொழுவமாக மாறிய அரசு பள்ளி வளாகம்! - காஞ்சிபுரம் வடபட்டினம் கல்விசீர்

காஞ்சிபுரம் : அரசு பள்ளியில் சுற்று சுவர் இல்லாததால் ஆடுமாடுகள் தங்கும் தொழுவமாக மாறியுள்ள அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கல்வி சீர் வழங்கும் வ

By

Published : Aug 29, 2019, 6:05 PM IST


காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே வடப்பட்டினம் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையிலும் இப்பள்ளியில் சுமார் 105-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இந்நிலையை உணர்ந்த ஊர் மக்கள் சுமார் 1 லட்சத்து 50,000 ரூபாய் செலவில் பள்ளிக்கு தேவையான அடிப்படை உபகரணங்கள், அனைத்து மாணவர்களுக்கும் 2 செட் பள்ளி சீருடைகள், நோட், புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் இலவசமாக வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை, “கிராம மக்கள் பள்ளியின் நிலை அறிந்து தாமாக முன்வந்து கல்வி சீர் வழங்கியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

கல்வி சீர் வழங்கும் விழா

மேலும் பேசிய அவர், இப்பள்ளிக்கு சுற்றுப்புற சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் ஆடு மாடுகள் வந்து தங்கும் தொழுவமாக மாறி உள்ளது. மேலும் மாணவர்கள் இங்கு அமர்ந்துதான் மத்திய உணவு உண்ணும் நிலை உள்ளதால் அரசு இதனை உடனடியாக கருத்தில்கொண்டு சுற்று சுவர் அமைக்க வேண்டும் என அவர் பள்ளி சார்பாக கோரிக்கை வைத்துள்ளார் .

ABOUT THE AUTHOR

...view details