காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்றது. உள்ளாட்சித் தேர்தலுக்கு நேற்று (செப்.16) முதல் விருப்பமுள்ளோர், வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், குன்றத்தூர் என ஐந்து ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.