தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜாஜி மார்க்கெட்டில் மக்கள் நேரடியாக காய்கறிகளை வாங்க தடை - வியாபாரிகள் வேதனை - Kanchipuram rajaji market

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பொது போக்குவரத்து தொடங்கினாலும் காய்கறி சந்தையில் பொதுமக்கள் நேரடியாக வந்து வாங்குவதற்கு தடை இருப்பதால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் ராஜாஜி மார்கெட் வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர்.

ராஜாஜி மார்கெட்டில் மக்கள் நேரடியாக காய்கறிகளை வாங்க தடை
ராஜாஜி மார்கெட்டில் மக்கள் நேரடியாக காய்கறிகளை வாங்க தடை

By

Published : Jun 21, 2021, 3:17 PM IST

Updated : Jun 21, 2021, 4:31 PM IST

தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகளால் கரோனா தொற்று பாதிப்புகள் நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றுமுதல் பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக இயங்கிவந்த காய்கறி சந்தையானது தற்போது வழக்கமான ரயில்வே சாலையிலுள்ள ராஜாஜி மார்கெட் பகுதியிலேயே இயக்கப்படுகிறது.

இச்சந்தையின் இருபக்க கதவுகளும் அடைக்கப்பட்டு சிறு வியாபாரிகள், குறு வியாபாரிகள் அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே உள்ளே சென்று காய்கறி, மளிகைப் பொருள்கள் மொத்த விலையில் வாங்கி வர முடியும்.

பொதுமக்கள் சென்று மேற்கண்ட பொருள்களை வாங்க தடை விதிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சுமார் 300 வியாபாரிகள், 200க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் என இயங்கிவரும் இந்தக் காய்கறி சந்தையில் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் வரவு செலவு நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் சிறு வியாபாரிகள் மட்டுமே பொருள்களை வாங்க அனுமதிக்கப்படுவது லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பொது போக்குவரத்து தொடங்கியதால் பொதுமக்களும் காய்கறி சந்தைக்கு உள்ளே சென்று பொருள்களை வாங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

Last Updated : Jun 21, 2021, 4:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details