தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அலுமினிய புகையால் பாதிப்பு: நடவடிக்கை எடுக்காத மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்! - People affected by aluminum waste leaving the factory

காஞ்சிபுரம்: பிள்ளைப்பாக்கத்தில் செயல்பட்டுவரும் அலுமினிய உருக்கு தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகையால் பாதிக்கப்படுவதாக மாசுக் கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் அலுமினிய கழிவு
தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் அலுமினிய கழிவு

By

Published : Mar 5, 2021, 6:27 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்துவரும் நிலையில் இப்பகுதியில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் செயல்பட்டுவரும் அலுமினியக் கழிவுகளை உருக்கும் தொழிற்சாலையில் முறையாகப் புகைப்போக்கி அமைக்காததால், தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கரும்புகை, அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் சூழ்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

அலட்சியம்

இது குறித்து மாசுக் கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகாரளித்தும், அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

செவிசாய்க்கப்படுமா?

தொழிற்சாலையில் முறையாகப் புகைப்போக்கி அமைக்க வேண்டும் அல்லது தொழிற்சாலையை குடியிருப்புப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

இதையும் படிங்க:கழிவு நீரை அகற்றும்வரை நகரமாட்டேன் - முன்னாள் அமைச்சரின் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details