காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா தண்டலம் பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது.
இக்கல்லூரிக்கு, உயர் வகை கட்டட தீ விபத்து தடையில்லாச் சான்றிதழ் பெற, காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் குமாரை, தனியார் மருத்துவக் கல்லூரி பிரதிநிதி அணுகியுள்ளார்.
'ரூ.1.5 லட்சம் அட்வான்ஸ் வேணும்'
அப்போது தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால், வேலூர் மண்டல துணை இயக்குநர் சரவணகுமாருக்குப் பணம் வழங்க வேண்டும் எனக் கூறி, காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் குமார், தனியார் மருத்துவக் கல்லூரி பிரதிநிதியிடம் மூன்று லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தைக் கேட்டு, முதல் தவணையாக ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை அட்வான்ஸ் ஆக கேட்டுள்ளார்.
ரூ.3 லட்சம் கொடுங்க - தீயணைப்புத்துறை அலுவலர் இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் குமார், தனியார் மருத்துவக் கல்லூரி பிரதிநிதியிடம் பேரம் பேசி லஞ்சம் கேட்கும் காணொலி தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதையும் படிங்க: An earthquake in Vellore: வேலூர் அருகே நிலநடுக்கம்