தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விரைவில் குணமடைந்த கரோனா நோயாளிகள் - காரணம் என்ன? - சித்த மருத்துவம் மையம்

கடந்த 20 நாட்களில் கரோனா தொற்று பாதித்து, காஞ்சிபுரம் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 194 பேர் குணமடைந்துள்ளதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா நோயாளிகள்
கரோனா நோயாளிகள்

By

Published : Jun 7, 2021, 12:35 AM IST

காஞ்சிபுரம்: ஏனாத்தூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு சார்பில் கரோனா நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை கடந்த மே மாதம் 17 ஆம் தேதிமக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.

இந்த மையம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 232 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 194 பேர் 20 நாட்களில் குணமடைந்து விட்டதாகவும், எஞ்சிய 38 பேர் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும், இம்மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு காலையில் மஞ்சள்பொடி, உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தல், மூலிகை தேநீர், எட்டு வடிவ நடைபயிற்சி, உடற்பயிற்சிகள், வர்மம், கைவிரல்களால் நோயை குணப்படுத்தகூடிய முத்திரைப் பயிற்சிகள், கபசுரக் குடிநீர் போன்றவை வழங்கப்படுகின்றன.

இங்கிருந்து குணமடைந்து வீடுத் திரும்புவோருக்கு நெல்லிக்காய் லேகியம், உடல் வலியை நீக்கும் அமுக்கரா சூரண மாத்திரை ஆகியவை அடங்கிய மருந்துப் பெட்டகமும் கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே, சிகிச்சை தொடங்கிய கடந்த 20 நாட்களில் 194 பேர் குணமடைந்து வீடுத் திரும்பிருப்பதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'தடுப்பூசி இல்லை' காவல்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

ABOUT THE AUTHOR

...view details