தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு... ஏகனாபுரம் மக்கள் ஒப்பாரி போராட்டம்...

காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் மக்கள் ஒப்பாரி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு

By

Published : Aug 21, 2022, 1:02 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு

இதனிடையே ஏகனாபுரம் மக்கள் விளைநிலங்களில் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று (ஆக.21) ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகள் கட்டியும், ஊர்வலமாக சென்று போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில், கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்று ஒப்பாரி வைத்து அழுது தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இதனால், அங்கு பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தையில் உயர் அலுவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பரந்தூர் இரண்டாம் விமானநிலையம் அமைய உள்ள இடத்தில் மோசடி பத்திரப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details