தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 6, 2020, 4:06 PM IST

ETV Bharat / state

பூங்காவை ஆய்வு செய்த இயக்குநர்

காஞ்சிபுரம்: கருங்குழி பேரூராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் செயல்படும் வளம் மீட்பு பூங்காவை பேரூராட்சியின் இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.

panchayat dierectors inspect renewable resources park in kancheepuram
panchayat dierectors inspect renewable resources park in kancheepuram

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் செயல்படும் வளம் மீட்பு பூங்காவில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் தீவிரமாக பரவிவருகிறது.

இந்நிலையில், பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பாதுகாப்புடன் கையாள்வது குறித்து பேரூராட்சிகளின் இயக்குநர் பழனிசாமி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு, தடுப்புப் பணியில் தன்னார்வலராக செயல்படுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இவருடன் காஞ்சிபுரம் மாவட்ட உதவி இயக்குநர் மனோகரன், கருங்குழி செயல் அலுவலர் கேசவன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ஊரடங்கால் பசியில் தவிக்கும் வனவிலங்குகள்... உதவி கேட்கும் பூங்கா காப்பாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details