தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஒரு அணை கட்டினால் 9 கிராமங்கள் வாழும்..!"- பொதுப்பணித்துறை - palar river

காஞ்சிபுரம்: கல்பாக்கம் அருகே உள்ள வயலூர் பாலாறு குறுக்கே தடுப்பணை கட்டும் பணி தொடங்கி நான்கு மாதங்களில் தீவிரமாக செயல்பட்டு 75 விழுக்காடு பணிகளை நிறைவு செய்துள்ளதாக பொதுப்பணித்துறை மேலாளர் தெரிவித்துள்ளார்.

அணை

By

Published : Jul 11, 2019, 5:35 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் நீர்த் தட்டுப்பாட்டை குறைப்பதற்காகப் பாலாறு குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்தினை அறிமுகம் செய்தார். அதனை நிறைவேற்றும் விதமாக தற்போது ஆட்சியில் உள்ள எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ஏழு தடுப்பணைகள் கட்டப் போவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது 2 தடுப்பு அணைகள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. இதனையடுத்து முதலாவதாக வல்லிபுரம் என்னும் ஊரில் 700 மீட்டர் அளவிற்குத் தடுப்பணை கட்ட ஆரம்பித்துக் கிட்டத்தட்ட 90 விழுக்காடு பணி நிறைவடைந்துள்ளது.

அணை கட்டும் பணி

கல்பாக்கம் அருகே பாலாற்றின் குறுக்கே கிட்டத்தட்ட ஆயிரத்து 590 மீட்டர் நீளமுள்ள தடுப்பணை தற்போது கட்டப்பட்டு 75% பணி நிறைவடைந்துள்ளது. மழைக் காலமான அக்டோபர் மாதத்திற்கு முன்பு இந்த பணியை முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். இத்தடுப்பணை 8 மீட்டர் ஆழமும் 1.5 மீட்டர் உயரமும் கொண்டது.

இந்த தடுப்பணையின் பணி முடிந்தவுடன் மழைக்காலங்கள் முடிந்த பிறகு திட்டமிட்டபடி மீதமுள்ள ஐந்து தடுப்பணைகளும் கட்ட போவதாகவும் பொதுப்பணித் துறை மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்று தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கிட்டத்தட்ட 9 கிலோ மீட்டர் தூரத்திற்குத் தண்ணீர் ஊற்று வந்து நீர்த் தேக்கம் ஏற்படும் எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details