காஞ்சிபுரம்: பஞ்சுபேட்டை பெரிய தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில், அக்னி வசந்த தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த அக்னி வசந்த தீமிதி விழாவின் ஒரு பகுதியாக நாள்தோறும் பாரதம் சொற்பொழிவு நடத்தப்பட்டு வந்ததைத் தொடர்ந்து இன்று (மே 25) பீமன், துரியோதனன் படுகள உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
உற்சவத்திற்காக பிரமாண்டமாக துரியோதனன் சிலை அமைத்து, கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன், துரியோதனன் ஆகியோர் போரிடும் போர்க்களக் காட்சி நடத்தப்பட்டது. பீமன், துரியோதனன் படுகள காட்சி மற்றும் தீமிதி விழாவிற்காகக் காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருந்த பஞ்சுபேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி திரௌபதி அம்மனை வழிபட்டனர்.
பஞ்சுபேட்டை திரௌபதி அம்மன் ஆலயத்தில் நடந்த பீமன் துரியோதனனை வதம் செய்த படுகள உற்சவம்! - திரௌபதி அம்மன்
பிரசித்திபெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி விழாவின் ஒரு பகுதியாக, துரியோதனனை பீமன் வதம் செய்த படுகள உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
படுகளம் உற்சவம்
இதையும் படிங்க: மல்லுக்கட்டான துவாக்குடி ஜல்லிக்கட்டு போட்டி
TAGGED:
Bloody battle of Kurukshetra