தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பா. ரஞ்சித், வைரமுத்து சாதி கலவரத்தை தூண்டுகின்றனர் - ஹெச். ராஜா - அத்திவரதர்

காஞ்சிபுரம்: சாதி கலவரத்தை தூண்டிவிட்டு அதன் மூலம் மத மாற்றம் செய்ய வேண்டும் என்பதே இயக்குநர் பா.ரஞ்சித், வைரமுத்து போன்றவர்களின் நோக்கம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

h. raja

By

Published : Jul 26, 2019, 6:41 PM IST

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதரை தரிசனம் செய்ய பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தன் குடும்பத்துடன் வந்திருந்தார். சாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'ராஜராஜசோழன் தற்போது உயிரோடு இருந்திருந்தால் பா. ரஞ்சித் எந்த ஒரு கருத்தும் கூறியிருக்கமாட்டார். ராஜராஜசோழன் காலத்தில் தனி உடைமை, நிலவுடைமை என்பது கிடையாது. தீண்டாமை என்பது சமண மதம் வந்த பிறகுதான் உருவானது.

சமண மதத்தில் தண்டனை இல்லை என்பதால் கொலை செய்பவர்கள், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள், உயிரைக் கொன்று உண்பவர்கள் ஆகியோரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

இந்து சமுதாயத்தில் எப்போதும் தீண்டாமை என்பது இருந்தது கிடையாது. எனவே ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டாமை என்பது இருந்திருக்க வாய்ப்பே இல்லை. இது திட்டமிட்டு செய்யப்பட்ட கிறிஸ்தவ மதமாற்ற சக்திகளுடைய சதியின் ஒரு பகுதி.

செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச். ராஜா

இயக்குநர் பா. ரஞ்சித் இந்து கிடையாது என நான் ஆதாரங்களோடு சிலவற்றை சமர்ப்பித்தால் சிலருக்கு கோபம் வருகிறது. இந்து சமுதாயத்தில் சண்டையை மூட்டி அதில் சாதி கலவரத்தை தூண்டிவிட்டு அதன் மூலம் மதமாற்றம் செய்ய வேண்டும் என்பதே பா.ரஞ்சித், வைரமுத்து போன்றவர்களின் நோக்கம். எனவே ரஞ்சித்தின் செயலானது மதமாற்றத்தின் ஒரு பகுதியாகும்' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details